[வெள்ளிக்கிழமை, 4 மே 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்தை அந்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுக்களை நடத்துவதனை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தடுக்கிறது என்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களினால் தமிழர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்த தயங்குகின்றனர் என்றும் ஆளும் தொழிலாளர் கட்சி மற்றும் எதிர்க்கட்சியும் பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய கட்சியுமான லிபரல் டெமொக்கரட்ஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இலங்கை பிரச்சனை தொடர்பான விவாதத்தின் போது பிரதான எதிர்க்கட்சியான கொர்ன்சவடிக் கட்சியானது புலிகளின் மீதான தடைக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த ஒப்புதல் தெரிவித்தது. மூன்று மணிநேரம் நடைபெற்ற விவாதத்தின் தொடக்கதில் பேசிய வெளிவிவகார அமைசர் ஹிம் ஹாவல், பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார். இருப்பினும் இலங்கை விவகாரங்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் தலைவரான தொழிலாளர் கட்சியின் கெய்த் வஜ் மற்றும் பிரதித் தலைவரான லிபரல் டெமொக்கரட்சின் ஹக்ஸ் உள்ளிட்டோர் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். "இலங்கை பிரச்சனைக்கு முட்டுக்கட்டையாக புலிகள் மீதான தடை உள்ளது. புலிகள் மீதான தடையை நீக்க அரசாங்கம் தயாராக உள்ளதா? என்பதனை உள்துறைச் செயலாளருடன் விவாதிக்க வேண்டும்" என்றனர் அவர்கள். இதற்குப் பதிலளித்த ஹாவல்ஸ், "உள்துறை செயலாளர் ஜோன் ரெய்டுடன் இதுவரை விவாதிக்கவில்லை. இருப்பினும் அது ஒரு நல்ல யோசனை. நிச்சயம் நான் செய்வேன்" என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் தடையானது அர்த்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பால் மோர்பி பயணம் மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இருதரப்பினருக்கும் நடுநிலைத் தரப்பாகவே பிரித்தானியா செயற்படும் என்றும் அவர்கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் ஹக்ஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்குப் பதிலளித்த ஹாவெல், தடை விதிப்பது என்பது அந்த இயக்கங்கள் ஆயுதங்களை தொடர்ந்து கையிலெடுக்க வகை செய்யும். கொன்செர்ட்டிவ் அரசாங்கத்தால் சின் பென் இயக்கம் தடை செய்யப்பட்டது. ஆனால் அதன் ஆதரவு குறைந்ததா? இல்லை. உண்மையில் அதற்கான ஆதரவு வளர்ந்தது என்றார். நன்றி:புதினம்
Friday, May 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.