Thursday, May 10, 2007

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி புதுவையில் மிகப் பிரம்மாண்ட கண்டனப் பேரணி.!!

[வியாழக்கிழமை, 10 மே 2007]

பிரான்சில் கைது செய்யப்பட்ட 1 7 ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி பிரான்சின் முன்னாள் குடியேற்ற நாடும் இன்றைய இந்தியாவின் யுனியன் பிரதேசமுமான புதுவையில் மிகப் பிரம்மாண்டமான கண்டனப் பேரணி இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட 38 இயக்கங்கள் சார்பில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

புதுவை பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ம. சிங்காரவேலர் சிலையிலிருந்து பிற்பகல் 12 மணியளவில் கொளுத்தும் வெயிலில் தொடங்கிய பேரணி பிரதான வர்த்தக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் அண்ணா சிலை, நேரு வீதியைக் கடந்து பிரான்சு தூதுவரகத்தை அடைந்தது.

38 இயக்கங்களின் சார்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

பெரணியில் பங்கேற்றோர் எழுப்பிய முழக்கங்கள்:


ஒன்றிணைவோம்! ஒண்றிணைவோம்!
ஈழத் தமிழர்களைக் காத்திட ஒண்றிணைவோம்!

வாழ்க! வாழ்க!
ஈழத் தமிழர் போராட்டம் வாழ்க!

இன்னுயிர் தந்து மன்னுயிர் கக்கும்
ஈழத் தமிழர் வாழ்கவே!

வெல்க வெல்க
வெல்கவே!
ஈழபோராட்டம் வெல்கவே!

மலரட்டும் மலர்ட்டும்
தமிழீழம் மலரட்டும்!

தமிழர் முகவரி
தந்த
தம்பி பிரபாகரன்
வாழ்கவெ!

என்பது உள்ளிட்ட முழக்கஙள் எழுப்பட்டன.

கண்டனப் பேரணியின் இறுதியில் புதுவைக்கான பிரான்சு தூதுவரக அதிகாரியிடம் புதுவை வாழ் தமிழர்களின் முறையீட்டு மனு கையளிக்கப்பட்டது.

அதில் 38 இயக்கங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு இருந்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.