[வியாழக்கிழமை, 10 மே 2007]
நேற்று புதன்கிழமை சிறீலங்கா பாராளுமன்றில் இடம்பெற்ற வான்புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான விவாதத்ததில் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வான்புலிகளின் தாக்குதலுக்கு வாழ்த்துத் தெரிவித்து கருத்துரைத்தையடுத்து சர்சை எழுந்திருந்தது.
இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியபோது பாராளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டார செல்வராஜா கஜேந்திரனை நேற்றுக் கூறிய கருத்துக்களுக்குக மன்னிப்புக் கோரவேண்டும் அல்லது வாபஸ் வாங்க வேண்டும் எனத் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து கஜேந்திரனினால் பாராளுமன்ற நடவடிக்கையின் போது சிறப்புரிமை அடிப்படையில் எனக்கு கருத்துரைக்க சகல சுதந்திரம் இருக்கின்றது அந்த அடிப்படையில் தான் கருத்துரைத்தேன் எனத் தெரிவித்தார்.
சிறீலங்காவின் விமானங்கள் எமது மக்கள் மீது குண்டுகளைப் போட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கின்றார்கள். என்னுடைய உறவுகளும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனைப் நான் பார்த்துள்ளேன். இவ்வாறான தாக்கங்கள் என்னைப் பெரிதும் பாதித்துள்ளது. அதனால் தான் இக்கருத்தைக்களைப் பாராளுமன்றில் தெரிவிக்க வேண்டிய சூழல் எழுந்தது என்றார் கஜேந்திரன்.
அரசியல் அமைப்பை மீறி நான் உரையாற்றிவிட்டதாக பெரிது படுத்தித் தெரிவிக்கின்றீர்கள். இதே அரசியல் அமைப்பை மீறி சொந்தக் குடிமக்களை விமானக் குண்டுகளால் கொன்றுகுவிக்கின்ற பாதிப்பினால்தான் நான் இவ்வாறு கருத்தைத் தெரிவித்தேன் எனத் சபாநாயகரிடம் தெரிவித்தார்.
சிங்கள மக்களையோ அல்லது பாராளுமன்றில் கூடியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மனதைப் புண்படுத்துவதற்காகவோ அச்சுறுத்துவதற்காகவோ இக்கருத்துக்களைக் கூறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் கூடியபோது அங்குவந்திருந்த ஜேவிபியினரும் ஆளும் கட்சியினரும் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதயைடுத்து சபாநாயகர் பாராளுமன்றில் இருந்து கொண்டு நீங்கள் நேற்றுக் கூறிய கூற்று பாராளுமன்ற சட்டதிட்டங்களை மீறும் செயல் ஆகவே இக்கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை தெளிவுபடுத்திவிட்டேன் எனத் தெரிவித்த போது நாங்கள் எதிர்பார்த்த படி மன்னிப்புக் கோராதபடியால் என்னை இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து வெளியேற்றுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக பாராளுமன்றிலிருந்து வெளியேறிய வேண்டிய தேவை எழுந்தது. என்னுடைய வெளியேற்றத்தையடுத்து அங்கிருந்த ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்திருந்தனர்.
சிங்கள இனவெறியர்கள் நான்கூறியதை விட மிகப் பயங்கரமாக, மோசமாக முன்னைய அமர்வுகளில் உரையாற்றியிருந்தார்கள். இது ஒன்று அவர்களின் கண்ணுக்குத் தென்படவில்லை. நாங்கள் தமிழர்கள் என்பதினால் இவ்வாறு வெளியே தூக்கி வீசப்படுகின்றோம் என கஜேந்திரன் தெரிவித்தார்.
Thursday, May 10, 2007
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கையிலிருந்து கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார்.!!
Thursday, May 10, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.