Saturday, May 05, 2007

மனித உரிமை- மனிதாபிமான உதவி வெவ்வேறானவை: பிரித்தானியாவுக்கு பாலித கோகன்ன அறிவுரை.

[சனிக்கிழமை, 5 மே 2007]

மனித உரிமைகளும் மனிதாபிமான உதவிகளும் வெவ்வேறானவை என்று சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளரும் சமாதான செயலகப் பணிப்பாளருமான பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

மனித உரிமைகளையும் மனிதாபிமான உதவிகளையும் பிரித்தானியா இணைத்துப் பார்க்கிறது. இரண்டும் வெவ்வேறானவை. மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தமானது அந்த உதவிகளைப் பெற்று வந்த மக்களையே பாதிக்கும்.

விடுதலைப் புலிகள் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையிலும் பேச்சுக்களை மீண்டும் நடத்துவது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார் பாலித கோகன்ன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.