Saturday, May 05, 2007

புல்மோட்டை கடற்சமரில் 2 டோராப் படகுகள் சேதம்.

[சனிக்கிழமை, 5 மே 2007]


திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் நடந்த நேரடி மோதலில் கடற்படையினரின் இரு டோராப் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சமரில் 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

புல்மோட்டை கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து அதிகாலை வரை இம்மோதல் நடந்தது.

கடற்கரும்புலி லெப். கேணல் தமிழவன் அல்லது புதியவன் என்று அழைக்கப்படும் யோகராசா ஜெயபாலன்,

கடற்புலிகளான லெப். கேணல் சதா என்று அழைக்கப்படும் சிறீஸ்கந்தராசா சத்தியசீலன் மற்றும் வீரவேங்கை தூயோன் என்ற மங்களராசா அன்ரனி அஞ்சலோ ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.