Sunday, May 13, 2007

புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த.!!

[ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2007]


தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும் என்று அமெரிக்கப் பிரதிநிதி பௌச்சரிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பௌச்சருடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போதும் பேச்சு நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் மகிந்த கூறியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கான கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பிலான அமெரிக்காவின் கவலையை மகிந்தவிடம் பௌச்சர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக எதுவித அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்காவின் ஆசிரியர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபாலி தென்னக்கோன் சிங்கள வார இதழுக்கு அளித்திருந்த நேர்காணலின் பிரதியை பௌச்சரிடம் கொடுத்த மகிந்த, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால்தான் இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

1 comment:

  1. புலிகளிடம் ஏ கே 47 இருந்த போதே சிங்கள அரசுகளால் வெற்றி கொள்ள முடியவில்லை. இப்போ புலிகளிடம் கடல் படை, விமானப்படை உருவாகிய பின் மகிந்த அவர்களை வெற்றி கொள்ள நினைப்பது வெறும் பகல் கனவே.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.