[ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2007] யாழ். பல்கலைக் கழகத்துக்கு திரும்ப இயலாத நிலையில் 600 மாணவர்கள் உள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் பி.கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த பெப்ரவரி மாதம் கல்விச் செயற்பாடுகள் தொடங்கின. இருப்பினும் 600 மாணவர்கள் இன்னமும் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. ஏ-9 பாதை மூடப்பட்ட நிலையில் தொடர்ந்த வன்முறைகளால் பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டது. அதன் பின்னர் பெப்ரவரி 19 ஆம் நாள் மீளத் திறக்கப்பட்ட போதும் மாணவர்களின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் மணவர்கள் ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்தது. வெளி மாவட்ட மாணவர்கள் மீண்டும் யாழுக்குத் திரும்ப இயலாத நிலையில் மீளத் திறப்பது பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் "யாழ். குடாநாட்டில் உள்ள மாணவர்களுக்காக மீண்டும் பல்கலைக்கழகம் திறக்கப்படுகிறது" என்று பதிவாளர் கந்தசாமி கூறியுள்ளார்.
Sunday, May 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.