சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, மனித உரிமைகளை மேம்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் உறுதி செய்யும் படி அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான தனது மூன்று நாள் பயணத்தின் முடிவின் போது ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
நான் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இலங்கை தொடர்பாக தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தி வருகின்றேன்.
இலங்கையின் நிலைமைகள், உல்லாசப்பயணிகளின் வரவுகள் குறைந்து போவதனால் எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வானூர்திப் போக்குவரத்து, நிதி உதவிகள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடி வருகின்றேன்.
நாட்டில் தோன்றியுள்ள பெரும் வன்முறைகளால் மிலேனியம் அபிவிருத்தித் திட்டங்களும் திருப்தி தரும் அளவிற்கு முன்னெடுக்கப்படவில்லை. இலங்கையின் நிலைமைகளை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
அரசாங்கம், தனது அதிகாரங்களை ஊடகத்துறையின் மீது பிரயோகித்து வருவதை அறிக்கைகளில் அவதானித்துள்ளோம். நாம் ஊடகத்துறையினரின் பாதுகாப்பு தொடர்பாகவே எப்போதும் பேசி வருகின்றோம்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கத்துடனான சந்திப்பில் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கு அதிகளவு செயற்பாடுகள் தேவை. கேள்வி என்னவெனில் எவ்வாறு இதனை நடைமுறைப்படுத்தப் போகின்றனர் என்பதுதான்.
கடத்தல்கள், காணாமல் போதல், படுகொலைகள் போன்ற பெருமளவான மனித உரிமை மீறல்களுக்கு துணை இராணுவக் குழுவினரே காரணம். அரசாங்கம் இந்த குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். அதன் தேவை குறித்தும், அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் நாம் கலந்துரையாடி உள்ளோம். இதில் முன்னேற்றம் ஏற்படும் என நான் நம்புகிறேன்.
படுகொலைகள், கடத்தல்கள் காரணமாக யாழ். குடாநாட்டில் உள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். அதிகளவான மக்கள் கவலைகளுடன் வாழ்கின்றனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போரில் நாம் இலங்கை மக்களுக்கு உதவுவோம்.
அனைத்து கட்சிக்குழுவினால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டம் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான ஒரு அடிப்படையாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார் அவர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.