[திங்கட்கிழமை, 7 மே 2007]
வன்னி வான் பரப்பில் சிறீலங்கா விமானப் படையின் வேவு விமானங்களின் உளவு நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக, போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
வடக்கிலுள்ள விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி சிறீலங்காப் படையினர் படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதை இந்த வேவு விமான செயற்பாடுகள் உணர்த்துவதாகவும், கண்காணிப்புக் குழு கூறியிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் அணியின் தாக்குதலின் பின்னரே வன்னியில் வேவு விமானத்தின் உளவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 23 முதல் 29ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் 8 தடவைகள் சிறீலங்கா விமானப் படைகள் வன்னியில் குண்டுத் தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், இவற்றில் 3 தடவைகள இரவு நேரக் குண்டுவீச்சு எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றில் அரைவாசிக்கு மேற்பட்ட குண்டு வீச்சுக்கள் கிளிநொச்சி நகரிலிருந்து 8 கிலோமீற்றர் தூரத்திற்குள் இடம்பெற்றிருப்பதுடன், ஒரு தடவை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தொலையில் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.