Sunday, May 06, 2007

மன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 5 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு.

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007] மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியடித்து 5 இராணுவத்தினரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடுவுக்கு தெற்காக உள்ள தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை பெரும் படை பலத்துடன் மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை நீண்ட இம்மோதலில் படைத்தரப்பினருக்கு விடுதலைப் புலிகள் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி முன்நகர்வை முறியடித்தனர். இதில் 5 இராணுவத்தினரின் சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.