[செவ்வாய்க்கிழமை, 8 மே 2007] பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவை மாநிலத்தில் 38 இயக்கங்கள் சார்பில் பாரிய கண்டனப் பேரணி எதிர்வரும் மே 10ஆம் நாள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் தொண்டர் படை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மீனவர் விடுதலை வேங்கைகள் மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இராஷ்டிரிய ஜனதா தளம் தமிழர் தேசிய இயக்கம் தனித் தமிழ்க் கழகம் செந்தமிழர் இயக்கம் செம்படுகை நன்னீரகம் புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை மக்கள் சிவில் உரிமைக் கழகம் தமிழினத் தொண்டியக்கம் வெள்ளணுக்கம் இயக்கம் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு நண்பர்கள் தோட்டம் மண்ணின் மைந்தர் நலவுரிமைச் சங்கம் தனித்தமிழ் இயக்கம் பூவுலகின் நண்பர்கள் விடுதலை வீரர் சீனுவாசன் இயக்கம் மக்கள் நல்வாழ்வு நற்பணி மன்றம் இயற்கைக் கழகம் தமிழ் எழுத்தாளர் கழகம் இளங்கோ மன்றம் திருவள்ளுவர் மன்றம் நெய்தல் அரசு ஊழியர் பேஎரவை இலக்கியப் பொழில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சமூக நீதிப் போராட்டக் குழு ஆதித்தமிழர் பேஎரவை சீவரத்தினம் பேரவை புரட்சிகர மகளிர் இயக்கம் பெரியார் திராவிடர் கழகம் இராவணன் பகுத்தறிவு இயக்கம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். சிங்கள இனவெறி அரசின் ஈவு இரக்கமற்ற கொடூரத் தாக்குதலால் இதுவரை ஒரு இலட்சம் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள் மீது முழுமையான பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றுக்கும் சிங்கள இனவெறி அரசு தடை விதித்துள்ளது. யாழ்ப்பாண நெடுஞ்சாலையைத் திட்டமிட்டே மூடியுள்ளது. இதனால், தமிழர்கள் பட்டினியால் தினம் தினம் செத்து மடிகின்றனர். உலகில் எந்தவொரு நாடும் உதவிட முன்வராத நிலையில் சொந்த மக்களின் ஆதரவை மட்டுமே நம்பிப் போராடி வருகின்றனர். சிங்கள இனவெறி அரசின் விமானத் தாக்குதல்களாலும் எறிகணை வீச்சுகளாலும் இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களாலும் உறவுகளைப் பறிகொடுத்து படுகாயங்களடைந்து வீடுவாசல்களை இழந்து உண்ண உணவின்றி உறங்க இடமின்றி காடுகளிலும் புதர்களிலும் ஒண்டிக் கிடந்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஈழத் தமிழர்கள் ஆளாகி வருகின்றனர். இந்தச் சூழலில்தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கின்ற உதவி மட்டுமே ஈழத்தில் துன்பத்தின் விளிம்பில் தத்தளிக்கிற தமிழர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. ஆழிப்பேரலைப் பேரழிவின் போதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற உலக நாடுகள் அளித்திட்ட உதவிகளை சிங்கள இனவெறி அரசு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்காமல் ஏமாற்றிதானே எடுத்துக் கொண்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே உதவி செய்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்றினர். பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று பட்டினிக் கொடுமையால் நோயால் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிற ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைத்த 17 ஈழத் தமிழர்களை சிங்கள இனவெறி அரசின் பித்தலாட்டப் பரப்புரைகளை நம்பி பிரான்சு அரசு பொய் வழக்குப் புனைந்து கைது செய்துள்ளது. சுதந்திரம்- சமத்துவம்- சகோதரத்துவம் எனும் சனநாயகத்தின் மூலவேர் முகிழ்த்துக் கிளைத்திட்ட பிரான்சு நாட்டின் இத்தகைய மனித உரிமை மீறல் செயலானது உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் வேதனைத் தீயை மூட்டியுள்ளது. ஈழத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்படுகிற துன்பங்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் அடிப்படைக் கடமை. தமிழினம் நாதியற்ற இனம் அல்ல என்று உலகுக்கு உணர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது. எனவே, பிரான்சு நாட்டில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டனத்தைத் தெரிவிக்கவும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் தூதுரக அதிகாரியிடம் மனு அளிக்க நடைபெற உள்ள கண்டனப் பேரணியில் அலை அலையாய்த் தமிழர்கள் அணிதிரள வேண்டுகிறோம். தமிழர்களே ஒன்றிணைவோம்! ஈழத் தமிழர்களைக் காப்போம்! என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை சிங்காரவேலர் சிறையிலிருந்து பிரெஞ்சுத் தூதரகம் வரை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. நன்றி:புதினம்
Tuesday, May 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.