[செவ்வாய்க்கிழமை, 8 மே 2007] மன்னார் தம்பனைக்கு மேற்காக உள்ள குறிச்சுட்டகுளத்தில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் குறிச்சுட்டகுளம் பகுதியில் முன்நகர்வை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். முறியடிப்புத் தாக்குதலில் போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏகே. எல்.எம்.ஜி துப்பாக்கி - 1 ரி-56 2 ரக துப்பாக்கிகள் - 2 40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி - 1 ஆகியன உட்பட படையினரின் தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்றி:புதினம்
Tuesday, May 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.