ஐந்து மில்லியன் ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை விடுவித்ததாக சிறிலங்காவின் இரு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மூத்த குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரிகள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் முறைப்பாடுகளை செய்துள்ளனர். மேலும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் அவர்களின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து அதன் முடிவாக அந்த இரு அதிகாரிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தம்மிடம் முறைப்பாடுகளை செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தம்மிடம் முறைப்பாடுகளை செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:புதினம்







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.