Thursday, April 05, 2007

வவுனியா மருத்துவர்களுக்கு கருணா குழுவினர் கொலை மிரட்டல்.!!!

[வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007]

வவுனியா பகுதியில் உள்ள மருத்துவர்களை கப்பம் கட்டுமாறு சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் விடுத்து வரும் மிரட்டல்களைத் தொடர்ந்து, வவுனியா பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் சட்டப்படி வேலை செய்தல் என்னும் போராட்டத்தை இரு நாட்களுக்கு நடத்தி வருகின்றனர்.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தினால் அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட மருத்துவமனையின் பல பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கருணா குழுவினர் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோர், தங்களிடம் பெரும் தொகை பணத்தை கேட்டதாகவும், கொடுக்க மறுத்ததால் தாக்குதல்களுக்கு அல்லது மரணத்தை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டியதாகவும் வவுனியா மருத்துவமனை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா பகுதி வழக்கறிஞர்களுக்கும் இதே போன்ற அச்சுறுத்தல்கள் கருணா குழுவினால் விடுக்கப்படடிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.