Friday, April 06, 2007

கைதினைக் கண்டித்து திங்களன்று பிரான்ஸ் தமிழர்களின் ஒன்றுகூடல்.!!

[வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007] பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதனை கண்டித்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (09.04.07) ஓன்று கூடவுள்ளனர். பிரான்ஸ் காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் (01.04.07) பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் 17 பேரை பரங்கரவாதிகள் என்ற பெயரில் கைது செய்ததனைக் கண்டித்தே இக்கண்டன ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை - இந்திய வணிகர் சங்கம் ஒழுங்கு செய்துள்ள இக்கண்டன ஒன்றுகூடலுக்கு இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் விளையாட்டுக் கழகங்கள் என்பன ஆதரவு வழங்குகின்றன. இதேவேளையில் பாரிசின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்ண நகரசபை உறுப்பினர் அன்ரொனி ரூசல், "தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தவறு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் தவறானவை' என கண்டனம் தெரிவித்துள்துடன் "தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பிரான்ஸ் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டுவது அனைத்து தமிழ் மக்களின் கடமை" எனவும் சுட்டிக்காட்டி உள்ளார். ஒன்றுகூடல் நடைபெறவுள்ள இடம்: இடம்: Metro : Trocadéro (n°- 6 et 9 ) காலம்: 09.04.07 நேரம்: பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.