Saturday, April 07, 2007

ஒட்டுக்குழுவினரால் யாழ். ம.உ.ஆணைக்குழு அதிகாரிகள் ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல்.!!

ஈ.பி.டி.பி தேச விரோதிகளும் இராணுவ புலனாய்வாளர்கலும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்களை பயன்படுத்தி சுவரொட்டிகளை எழுதி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்திருப்பதாக தெரியவருகின்றது. இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களாலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான பாலியல் வன்முறைகளும் அத்துமீறல்கள் கொலைகள் களவுகள் ஆட்கடத்தல் உடனுக்குடன் வெளியாகுவதால் ஆணைக்குழுவின் மீது சீற்றம் கொண்டுள்ள படைத்தரப்பும் ஒட்டுக்குழுவும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முடக்கவும் புகார் செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடனும் தமது அக்கிரமங்களை மூடி மறைக்கவும் பொதுமக்களை ஏமாற்றவும் திட்டமிட்டு இச் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதாக தெரிவிக்கும் பொது அமைப்புக்கள் மனித உரிமை ஆர்வலர்கள் வர்த்தக சமூகத்தினர் படையினரின் இச் செயற்பாடுகள் கண்ணுற்று இருக்கும் மக்களின் உணர்வுகளை மேலும் கொதிப்படைய செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.