Friday, April 06, 2007

மன்னாரில் கடற்படையினருடன் மோதல்: 7 படையினர் பலி- கலம் மூழ்கடிப்பு.!!!

[வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007] மன்னார் கடற்பரப்பில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் சுற்றுக்காவல் கலம் ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 7 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் கடற்புலிகள் வழமையான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சிறிலங்கா கடற்படையினருக்குச் சொந்தமான 3 சிறிய ரக சுற்றுக்காவல் கலங்கள் கடற்புலிகளின் படகுகளை நெருங்கி வந்து தாக்குல் நடத்தின. இத்தாக்குதலுக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரது சுற்றுக்காவல் கலம் ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 7 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய 2 கடற்படைப் படகுகள் சேதமடைந்துள்ளன. கொல்லப்பட்ட கடற்படையினரின் சடலங்களை கடற்படையினர் தமது மீட்புப்படகில் ஏற்றிச் சென்றதனை, தாக்குதல் நடத்திய கடற்புலிகள் உறுதிப்படுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கடற்புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் இன்றி கலங்கள் பத்திரமாக தளம் திரும்பியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.