Wednesday, April 04, 2007

அரசில் இணைந்தவர்களளில் சிலர் மீண்டும் ஐ.தே.கவில் இணைய விருப்பம்: ரணில்.!!!

[புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007]


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து அதன் அமைச்சரவையில் சேர்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் சிலர் மீண்டும் கட்சியில் இணைவதற்கு அனுமதியைக் கோரியுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

நான் அவர்களில் சிலரையே கட்சியில் மீண்டும் இணைய அனுமதிப்பேன், ஏனையோருக்கு அனுமதிகள் வழங்கப்பட முடியாது.

அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவிகளில் உள்ள சில முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு ஏதுவாக ரணிலுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கட்சியின் மூத்த கோரி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பதவிநிலைகளில் கட்சியின் கட்சிதாவிய உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று மீண்டும் கட்சியில் இணைந்துள்ள பிரதி அமைச்சர் எட்வேர்ட் குணசேகர தான் அரசில் இணைய எடுத்த முடிவு தொடர்பாக நேற்று நடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைமையிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.