[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007] சிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடுக்கடலில் இந்திய மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்களும், 200-க்கும் மேற்பட்ட மீன்பிடிப்படகுகளும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்படுகின்றது. மேலும் இந்திய மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் தொடருமாக இருந்தால், தாம் எல்லை கடந்து சென்று சிறிலங்காவின் கடற்பரப்பிலும் மறியலில் ஈடுபடுவோம் என மீனவர்கள் அறிவித்திருக்கின்றனர். கடந்த வாரம் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 அப்பாவித் தமிழக மீனவர்கள் இந்தியக் கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. கடற்புலிகளின் சாவால்களை சமாளிப்பதற்காக இந்திய கடற்படையை மோதல்களுக்குள் இழுக்கும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசு, தமிழக மீனவாகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இந்திய மத்திய அரசில் உள்ள சில தமிழின எதிர்பாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
Monday, April 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.