Monday, April 02, 2007

அம்பாறையில் பேரூந்தில் குண்டு வெடிப்பு: 8 பொதுமக்கள் பலி! 20 பேர் படுகாயம்

[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007]

பதுளை - அம்பாறை கொண்டுவெட்டுவான் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடி அருகே பேரூந்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இன்று மதியம் 12.10 மணியளவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் போது 5 பொதுமக்கள் கொல்லபட்டும் 20 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இக்குண்டானது பேரூந்தினுள் வெடித்ததா? அல்லது வீதியோரத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோரில் சிக்கியதா? என தெளிவாக தெரியவில்லை. தற்பொழுது தாக்குதல் நடைபெற்ற பகுதி மிகவும் பதற்றமான நிலையில் காணப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.