Monday, April 02, 2007

( 3ஆம் இணைப்பு)இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பஸ்ஸில் குண்டு வெடித்ததில் குறைந்தது 16 பேர் பலி

[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007]

பதுளை - அம்பாறை கொண்டவெட்டுவான் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடி அருகே பேரூந்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இன்று மதியம் 12.10 மணியளவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் போது 16 பொதுமக்கள் கொல்லபட்டும் 24 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் இதனை உறுதி செய்துள்ளது.

சிறீலங்காப் படையினரின் சோதனைச் சாவடியில் பேருந்தினை நிறுத்தி சோதனையிட்ட போதே மக்கள் பேருந்திலிருந்து இறங்கிய வேளையே குண்டு வெடித்துள்ளது. கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் சிங்கவர்கள் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களும் காயடைந்தவர்களும் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குலின் போது 11 பெண்களும், இரு சிறுவர்களும், 3 ஆண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திலல 3 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏனைய 13 பேரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி இறந்துள்ளனர் என அம்பாறை மருத்துவமனை தலைமை மருத்துவர் லங்காதிலக ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே செய்துள்ளனர் எனக் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.இக்குண்டுத் தாக்குதல் குறித்து கருத்துரைத்திருக்கும் விடுதலைப் புலிகள் இக்குண்டுத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை அடியோடு மறுப்புத் தெரிவித்துள்து. அத்துடன் இக்குண்டுத் தாக்குதலில் துணை இராணுவக் குழுவினர் சம்மந்தப்பட்டிருகலாம் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் மயிலம்பாவெளியிலுள்ள வில்லேஜ் ஆஃப் ஹோப் எனப்படும் சிறுவர் இல்லத்தில் தமது தொழில் நிமித்தம் தங்கியிருந்த 6 கட்டிட தொழிலாளிகள் நேற்றிரவு அங்கு நுழைந்த ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 6 பேரும் சிங்களவர்கள் என்றும் மேலும் ஒரு சிங்களவரும் இரண்டு தமிழர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.