[ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007]
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனைத்துலக கண்காணிப்பாளர்களை விரைவில் அனுப்ப உள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த இரு மாவட்டங்களிலும் வன்முறைகள் அதிகரித்ததால் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டனர். எனினும் தற்போது மீண்டும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நிலைமைகள் மேலும், மேலும் மோசமடைந்து வருகின்றன. கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பணியும் மிகவும் ஆபத்தாகவும், கடினமாகவும் மாறியுள்ளது.
இன்றைய நாட்களில் நாம் மேலதிக பாதுகாப்பை தேடவேண்டும். எனினும் நாம் எமது பணியை செய்ய ஆவலாக உள்ளோம். எமது குழுவுக்கு போர் நிறுத்த உடன்பாட்டை மீளப்பொற்றுக் கொள்ளும் எண்ணம் கிடையாது.
இரு தரப்பும் போர்நிறுத்த உடன்பாட்டை கைவிடும் வரை நாம் தொடர்ந்தும் பணியாற்றிக் கொண்டிருப்போம். கட்டுநாயக்க வான்படைத் தளத்திற்கு செல்வதற்கு அரசாங்கம் இன்றுவரை எமக்கு அனுமதியை வழங்கவில்லை.
தாக்குதல் இடம்பெற்ற இரு மாதங்களின் பின்னர் எமக்கு அங்கு செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் தருவது எமக்கோ அல்லது நாட்டுக்கோ எந்தவிதமான பயனையும் தரமாட்டாது என நாம் அரசாங்கத்துக்கு கூறியுள்ளோம். ஆனால் அதற்கும் அரசாங்கம் பதில் தரவில்லை என்றார் அவர்.

நன்றி:புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.