[ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007]
கடந்த வருடம் சிறுபான்மை இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மிரட்டல்களில் சிறிலங்காவும், பாகிஸ்தானும் முன்னணியில் உள்ளதாக சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்கான அனைத்துலகக் குழு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக்குழுவின் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்றது.
'மிரட்டல்களுக்கு உள்ளாகும் மக்கள்' என்னும் தரப்படுத்தலில் இந்த இரு நாடுகளும் மிகவும் அதிக நிலைக்கு முன்னேறியுள்ளன. இது 'உலகில் சிறுபான்மை மக்களின் நிலை' என்னும் அனைத்துலக மனித உரிமை அமைப்பின் வருடாந்த அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தை விட 47 இடங்களுக்கு முன்னேறிய சிறிலங்கா தற்போது முதல் 20 நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இதில் 2007 ஆம் ஆண்டே சிறுபான்மை மக்கள் அதிக மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
முறிவடைந்த போர் நிறுத்தம், அரசாங்க படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிரமடைந்துள்ள மோதல்களால் 100,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மை தமிழ் மக்கள் ஆவர்.
சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களுக்குள் சிக்கவில்லை. ஆனால் திட்டமிட்ட முறையில் அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இதில் அவர்கள் சிறுபான்மை என்ற காரணத்தால் கடத்தப்படுதல், காணாமல் போதல் என்பனவும் அடங்கும்.
ஒவ்வொரு நாளும் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்கின்றன. கடத்தப்படுதல், காணாமல் போதல், படுகொலைகள் அதிகரித்துச் செல்கின்றன. இது பெரும்பாலும் சிறுபான்மை மக்களின் சமூகத்தில் தான் நிகழ்கின்றன என சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்கான அனைத்துலகக் குழுவின் தலைவர் மார்க் லற்றிமர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பயப்பீதிகளுக்கும், பாதுகாப்பு இன்மைக்கும் பல குழுக்கள் காரணமாக உள்ளன. ஆனால் அதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் சிறிதளவே முயற்சி செய்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அஹ்மடீஸ், இந்து, பலுசீஸ், மெஹாஜீஸ், பஸ்தூன்ஸ், சீக்கியர் போன்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.