Saturday, April 07, 2007

வான்புலித் தாக்குதல் நேரத்தில் மகிந்த செய்தது என்ன?: சிங்கள ஏடுகள்.!!

[சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பி சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்சஇ வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார். வான்புலிகள் நள்ளிரவு 12.45 மணிக்கு தாக்குதல் நடத்திய போது அந்த செய்தி மகிந்த ராஜபக்சவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமது வானூர்திகள் மிக உயரத்தில் பறப்பன என்றும் புலிகளின் வானூர்திகள் தாழப்பறப்பன எனவும் அதனால் தமது வானூர்திகளால் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தாக்க முடியாது என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். மேலும் மற்றைய நாடுகளில் வான்படைத்தளங்களை பாதுகாக்கத் தொடர்ச்சியாக வானூர்திகள் பறந்து கொண்டே இருக்கும் என்றும் தமது வான்படையில் அப்படி இல்லை என்றும் மகிந்தவுக்கு கோத்தாபய சுட்டிக் காட்டியுள்ளார். தமது வானூர்திகள் மேலெழ 20 நிமிடங்கள் வரை எடுக்கும் என்றும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை துரத்தித் தாக்குவது சாத்தியமற்றது எனவும் மகிந்த ராஜபக்சவுக்கு கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வான்புலிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட கட்டுநாயக்க வான்படைத்தளத்தை மகிந்த ராஜபக்ச கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரடியாகப் பார்வையிட்டுள்ளார். இருப்பினும் கட்டுநாயக்க வான்படைத்தளத்தை பார்வையிடும் தனித்த பயணத்தை மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளவில்லை. இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணமாவதற்காக கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு சென்றபோது கட்டுநாயக்க வான்படைத்தளத்தில் வான்புலிகளின் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளை மகிந்த ராஜபக்ச நேரடியாகப் பார்த்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.