[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007]
சிங்கள கடற்படை தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டும் என்றும், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும், இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
'1983 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 24 ஆண்டு காலமாக 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் எல்லை மீறி வந்து சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.
தங்களை யார் சுட்டார்கள் என்பதனை தமிழக மீனவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள். ஆனால் நமது மீனவர்களின் குற்றச்சாட்டை நம்பாமல், சிங்கள கடற்படைத் தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சிங்கள கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படையின் கையாலாகத்தனத்தை மூடி மறைக்கவே இந்திய கடற்படைத் தளபதி விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார்.
குமரிக் கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் கடலில் சென்று உயிர் தப்பி மீண்டவர்களிடம் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா நேரில் வந்து விசாரணை நடத்த தயாரா" எனவும் அவ்வறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
நன்றி:புதினம்
Monday, April 02, 2007
விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்தும் இந்திய கடற்படைத் தளபதி: பழ. நெடுமாறன்.!!!
Monday, April 02, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.