Friday, March 09, 2007

புல்லுமலை நோக்கிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆரம்பம்.

வெள்ளி 09-03-2007 தென்தமிழீழத்தில் புல்லுமலை நோக்கிய படை நடவடிக்கை ஒன்றை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்புச் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் இப்படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்கள், எறிகணை, மற்றும் பல்குழல் சகிதம் முன்னேற்ற நகர்வு இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து கருத்துரைத்திருக்கும் தமிழீழ இராணுவப் பேச்சாளர் திருமலையின் களயதார்தம் கடந்த 25 வருடங்களாக கரத்தடிப் போர் முறையே முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது புல்லுமலைப் பகுதி நோக்கி முன்னேறும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் போராளிகள் களமாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சம்பூர் மற்றும் வாகரை ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பெரும்வெற்றிச் செய்தியாக காட்டியிருக்கிறார்கள். அது தவிர வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக வேறு ஒரு நடவடிக்கையும் இடம்பெறவில்லை. மட்டக்களப்பில் தற்போது மிகக்கொடூரமான படைநடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் நோக்கம் விடுலைப் புலிகளை வெல்வது அல்ல. அங்கு பொதுமக்களுக்கு பெரும் அவலம் ஒன்றை ஏற்படுத்தவே இப்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள். pathivu.com

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.