[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007] திருகோணமலை வடக்கு பேராறு பகுதியில் விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பை தாம் உறுதி செய்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிறிகேடிய பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். திருகோணமலை வடக்கு கும்புறபிட்டிய பேராறு இருந்து புலிகள் தாக்குதல் நடத்தினர் . இதனால் கும்புற பிட்டிய பிரதேசத்தின் பாதுகாப்பை பாதுகாப்பு படையினர் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது . கும்புறுபிட்டிய பிரதேசத்தில் இருந்து புலிகள் தப்பிச் சென்று போது பகுதியிலுள்ள 3 முகாம்களில் இருந்தனர் . இதனால் பிரதேச வாசிகளிற்கும் இராணுவத்தினர் , கடற்படையினர் மற்றும் அநுராதபுர வீதிக்கும் அச்சுறுத்தல் இருந்தது எனவே இராணுவத்தினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளின் பாரிய மூன்று முகாம்களை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர்பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அதேவேளை கிழக்கில் விடுதலைப்புலிகளிற்கு எதிராக ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய படையெடுப்பினை புலிகள் முறியடித்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்
Friday, March 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.