Thursday, March 15, 2007

கருணா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சிறிலங்கா அரசு

[வியாழக்கிழமை, 15 மார்ச் 2007]

சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து பொது மக்களை கருணா குழுவினர் கடத்திச் செல்வதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவத்ததாவது:

அரசியல் வேலைகள் தவிர்ந்த கருணா குழுவினரின் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக கடந்த வாரம் அரச தலைவர் காவல்துறை மா அதிபருடன் சந்திப்பை நடத்தி பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே மட்டக்களப்பு தவிர்ந்த கொழும்பு, திருமலை ஆகிய இடங்களிலும் கருணா குழுவினர் அலுவலகங்களை திறந்துள்ளதாகவும், கொழும்பு அலுவலகத்திற்கு அண்மையில் வசிக்கும் மக்கள் இது தொடர்பாக தாம் அச்சமடைந்துள்ளதாக முன்னர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.