[வியாழக்கிழமை, 15 மார்ச் 2007]
இலங்கைத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாய் நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் என்ற நிலையில் தமிழர்களை இலங்கை அரச வைத்துள்ளது. அப்படிபட்ட நிலையில், இந்தியவிற்கு பல்லாயிரம் தமிழ் அகதிகள் தமிழகம் நோக்கி வந்து, சுமார் 103 அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அண்மைக்காலமாய் இலங்கையில் நிலவும் போர் சூழல் காரணாமாய், தமிழர்கள் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேசுவரம் வந்தடைகின்றனர். அங்கே அகதிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள 287 ஏக்கர் நில பரப்பில், உயரமான சுற்றுச்சுவருக்கு மேல் மின்சாரம் வேலியுடன் அமைந்துள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தான், புதிதாய் வந்திரங்கும் அகதிகளின் வாய்லாய் அமைகிறது.
மண்டபம் முகாமில் ஏற்கெனவே ஆயிரக்காணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை கண்காணிக்க காவல்துறையின் 'மண்டபம் எச்.எல்.ஆர் காவல்நிலையம்' உள்ளது. சில காலமாய் இங்குள்ள அகதிகள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாதென காவல்துறையினர் கட்டுப்பாடு இடுகின்றனர். வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு, கையில் தடி ஏந்திய காவல் போடப்படுகிறது. இவ்வகை கட்டுப்பாடுகள்;, அகதிகளின் நலனுக்காக என எடுத்துக்கொண்டாலும், இச்செயல் ஏதோ சிறை போன்றே தோன்றுகிறது.
அவ்வப்பொழுது, காவல்துறையின் அத்துமீறல்கள் நடைபெற்று வருகிறது. 07-07-2006 இங்கிருந்த 10 வயது சிறுவன் திருடினான் என்று கூறி, அவனை இரத்த காயம் வருமளவுக்கு அடித்தனர். உரிமைக்கு போராடும் பல அகதிகள், போராளி எனக்கூறி செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர். அகதிகளின் இழி நிலையை தமிழகத்தின் பல அரசியல் அமைப்புகள் நேரிடையாய் சென்று முகாமிலுள்ள துன்ப நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டன. தி.மு.க ஆட்சியேற்ற பின் இரு அமைச்சர்கள் அடங்கிய குழு முகாமை பார்வையிட்டு, அடிப்படை தேவைகள் மேலும் அமைக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
எத்தனை பரிந்துறைகள், அறிக்கைகள் வெளியிட்டாலும், சில நேரங்களில் காவல்துறை அகதிகளிடம் நடந்து கொள்ளும் முறை மிக மோசமாயுள்ளது. நான்கு அகதிகள் ஒன்றாய் கூடி பேசினாலோ, சிரித்து மகிழ்தாலோ, அங்குள்ள காவல்துறையினர் அவர்களை முறைப்பதும், பல நேரங்களில் கெட்ட வார்த்தையால் ஏசுவதும், சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து அடிப்பதும் வெளியுலகுக்கு தெரியாத செய்திகளாய் காற்றி கரைகிறது. அகதிகள் அவர்கள் சார்ந்துள்ள மத வழிபாடுகளுக்கு தகுந்த கோயிலோ, மசுதியோ அல்லது தேவாலையங்களோ இல்லாத சுழலில், அவர்கள் ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து, அங்கு ஒன்று கூடி வழிபாடு செய்வது நடைமுறை. அங்குள்ள கிருத்துவர்கள், அகதிகள் ஆணையாரிடம் தேவாலையம் ஒன்று வேண்டுமென வேண்டுகோளை விடுத்து பல காலம் ஆகிவிட்டது.
ஆணையாளாரும் அரசு தொகை ஒதுக்கும்வரை, நீங்கள் ஏதாவது ஒரு வீட்டில் வழிபாடு நடத்திக்கொள்ள அணுமதித்துள்ளார். 14-03-2007 அன்று மாலை 12 பேர் கிருத்துவர்கள் முகாமிலுள்ள ஒரு வீட்டில்; வழிபாடு செய்ய கூடியுள்ளனர். சில நிமிடங்கள் கழித்து அங்க வந்த திரு.பாலசிங்கம் என்ற துணை ஆய்வாளரும், அவருடன் வந்த இரண்டு ஏடுகளும், கூடியிருந்தவர்களை பார்த்து கிருத்துவ வழிபாடு நடத்தகூடாது என்றனர். ஏன் எனக் கேட்ட அகதிகளை, காவல்துறையினர் கையிலிருந்த குச்சியால் (லத்தி) கண்முடித்தனமாய் அடித்துள்ளனர். பின்னர், அங்குள்ளோரை காவல் நிலையம் அழைத்து சென்றதும், அடித்த செய்தி வெளியே கசிய, காவல் நிலையம் நோக்கி ஊடவியலாளர்கள் படையெடுத்தனர்.
இதையறிந்த துணை ஆய்வாளரும், மற்றும் இரண்டு ஏடுகளும் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரி, அகதிகளை தங்கள் முகாமிற்கு செல்லுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.இதுபோல் நடைபெறுவது முதல்முறையல்ல.
ஆகையால், தமிழக அரசு தற்பொழுது காவல் நிலையத்திலுள்ள காவல்கள் அனைவரையும் உடனடியாய் மாற்றி, மனித நேயமிக்க காவல்துறையினரை மண்டபம் முகாம் காவல் நிலையத்திற்கு பணியமத்த வேண்டும். இலங்கை அரசிடம் உயிர் தப்பி வரும், தமிழ் அகதிகளின் உயிருக்கும், உடமைக்கும் நாம் பாதுகாப்பளிப்து நம் கடமைகளில் ஒன்று.
Thursday, March 15, 2007
இலங்கை அகதிகளிடம் தமிழக காவல்துறையின் வெறியாட்டம்...
Thursday, March 15, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.