Saturday, March 10, 2007

தொடர் தாக்குதல்களால் சுடுகாடாக மாறியுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசம்.

[சனிக்கிழமை, 10 மார்ச் 2007] சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் வான் மற்றும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களினால் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசம் சுடுகாடாக மாறியுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மோதல்கள் வெடித்த பின்னர் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். இப்பிரதேசத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பல வழிபாட்டு ஸ்தலங்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் கட்டடங்கள் என்பன எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடியிருப்புக்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. மக்கள் இடம்பெயர்ந்து இருப்பதன் காரணமாக பச்சிலைப்பள்ளி பிரதேசம் சிறிலங்காப் படையிரின் தாக்குதல்களினால் சுடுகாடாக காட்சி தருகின்றது. இதேவேளை வடமராட்சி கிழக்கை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்தி வரும் தாக்குதல்களினால் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்துள்ளனர். குடாரப்பு, மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, வத்திராயன் போன்ற கிராமங்களில் இருந்து மக்கள் முற்றாக வெளியேறியுள்ளனர். ஆனையிறவுப் படைத்தளத்தினை சிறிலங்கா படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில் எவ்வளவு பேரழிவுகளை ஏற்படுத்தினார்களோ அதேபோன்று கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் மக்கள் குடியிருப்புக்களை பேரழிவுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.