[வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2007] "சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் தொகை பணம் கேட்டு பொதுமக்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளதாவது: "கடத்தல்களில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பெயர் விபரங்களை எமது கட்சி தெரிந்து வைத்துள்ளது. 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய் கேட்டு பொதுமக்களை கடத்தும் அமைச்சர்கள் தொடர்பான தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. எனினும் சில காரணங்களால் அவற்றை நாம் வெளியிட முடியாது. அரசாங்கத்தின் ஆதரவுடன் கருணா குழு இயங்குகின்றது. அது நாட்டின் நலனுக்கு ஆபத்தானது என்று அவர் தெரிவித்துடன் சபையில் இருந்த மீன்பிடித்துறை அமைச்சரான பிலிக்ஸ் பெரேராவை நோக்கி நாட்டில் வேறு ஆயுதக்குழுக்களும் இயங்குவதனைன அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிலிக்ஸ் பெரேரா "எந்த நாட்டில் போர் நடந்தாலும் அது பொதுவானது" என்று கூறினார். இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் தாம் அவர்களிடம் கடத்தல்களில் ஈடுபடுவோரின் பெயர் விபரங்களை தெரிவிக்க தயராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்தது. புதினம்.கொம்.
Friday, March 23, 2007
'கொழும்பு ஆட்கடத்தல்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு': ஐ.தே.க.
Friday, March 23, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.