[வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2007] ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்க முன்வந்ததை தாம் வரவேற்பதாக பலவந்தமாக கடத்தப்படுவோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு கடந்த புதன்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பலவந்தமாக கடத்தப்படுவோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் தலைவரான சன்ரிஆகோ கோர்சீரா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அண்மைக்காலமாக இலங்கையில் பலவந்தமாக கடத்திச் செல்லப்படுவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றன. இது எமக்கு கவலையை தருகின்றன. முக்கியமாக மோதல்கள் ஆரப்பித்துள்ள வடக்கு - கிழக்குப் பகுதிகளில் கடத்தல்கள் அதிகரித்துள்ளன என்றார் அவர். எனினும் வடக்கு - கிழக்கில் இடம்பெறும் சில கடத்தல்களில் படையினர் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளே ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
Friday, March 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.