Friday, March 23, 2007

இராணுவத்தின் வவுணதீவு, உன்னிச்சை பகுதியில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு.

விடுதலைப்புலிகளால் சிறீலங்கா படைகளால் மட்டக்களப்பு வவுணதீவு, உன்னிச்சைப்பகுதி ஆக்கிரமிப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். வெள்ளி மதியம் ஆளில்லா வேவுவிமானம் முதலில் வட்டமிட்டு பின் நான்கு சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான்கலங்கள் குண்டுத்தாக்குதல்களை வவுணதீவுப்பகுதியில் மேற்கொண்டு சிறீலங்கா படைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் மற்றும் கடும் ஆட்டிலெறித் தாக்குதல்களை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை மேற்கொண்டுள்ளதாகவும் சீராளன் மேலும் தெரிவித்திருந்தார். இவ் ஆக்கிரமிப்பு முறியடிப்புத் தாக்குதலில் பவள் கவசவாகனம் ஒன்று சேதப்படுத்தப்பட்டதாகவும் இராணுத்தினர் தமது நிலைகளுக்கு பின்நகர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இப்பிரதேசங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளதால் மக்களுக்கு எதுவித இழப்பிக்களும் ஏற்படவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.