Sunday, March 25, 2007

கட்டுநாயக்க விமானநிலையம்மீது தாக்குதல்.

திங்கட்கிழமை அதிகாலை சிறீலங்கா சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் ஆரம்பித்து, தற்போதும் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தளத்தினுள் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமுள்ளன. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. (மேலதிக இணைப்பு) அதிகாலை 1:30 க்கு ஆரம்பித்த இந்தத் தாக்குதல்கள், விமானத் தளத்தினுள் தொடர்கின்றன. தொடர்ச்சியாக குண்டுச் சத்தங்களும் சூட்டுச் சத்தங்களுடம் கேட்ட வண்ணமுள்ளன. தற்போது இலங்கை நேரம் 1:50 மணியளவில், கடும் புகைமண்டலமாக விமானத்தளம் காட்சியளிக்கிறது. தாக்குதல்கள் தொடர்கின்றன. இராணுவம் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெறுவதை, சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் ஊர்ஜிதம் செய்துள்ளது. எனினும் சேதவிபரங்களோ யார் தாக்குதல் புரிகிறார்கள் என்ற விபரத்தையோ தர ஊடக மையம் மறுத்திருக்கிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.