Sunday, March 25, 2007

யாழ் குடாவில் 2000 இளைஞர்களைக் கொலை செய்யப் படையினர் திட்டம் - இராணுவ உளவாளி.

[ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2007] யாழ் குடாநாட்டில் மேலும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் கொல்லப்படலாம் என இராணுவ உளவாளிகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்துடன் வெள்ளை வானில் திரிந்து காட்டிக் கொடுக்கும் ஒருவர் இந்த திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட குரோதங்களுக்காக பலரை இராணுவத்தினரின் வெள்ளை வானில் சென்று தாக்கியும், காட்டிக் கொடுத்தும், கடத்தியும், கொலைகள் செய்தும் வந்த குறிப்பிட்ட நபர் தற்போது தான் பல பிழைகளை விட்டு திருந்தியுள்ளதாக தெரிவித்து குறிப்பி;டட்டவர்களிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டியுள்ளார். இதன்போது தான் எதிர்காலத்தில் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடப் போவதில்லையென்றும் எதிர் காலத்தில் மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை படுகொலை செய்யும் நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுமார் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களினால் கடத்தியும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்தகைய செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளமையும் இவைகள் சம்பந்தமாக ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளமையும் இந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும். இளைஞர்களைத் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் அழிப்பதன் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டலாம் என்ற நிலைப்பாட்டில் தான் இரண்டு மூன்று வருடங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என முக்கிய அமைச்சர் வெளி நாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியவுடன் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.