Saturday, March 17, 2007

நாகர்கோவிலில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு.

[சனிக்கிழமை, 17 மார்ச் 2007]

யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி இன்று சனிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இம் முறியடிப்பின் போது படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் - 2, ரவைக்கூடுகள் - 4, ரவைகள் 100 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.