[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007]
"வடபகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றிற்கான ஒத்திகைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
"கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான விடுதலைப் புலிகள் வடக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அங்கு மிகத் தீவிரமான போர்த் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
புதிய படையணிகள் பயிற்றுவிக்ப்பட்டுள்ளனர். மண் மூட்டைகள் கொண்டு மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் படையணிகள் தமது ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகளவான கைத்துப்பாக்கி வீரர்களும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்கள் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கக்கூடும். இந்த தயாரிப்புக்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகளினால் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் அவர்கள் வடக்கில் தமது கவனத்தை செலுத்தியிருப்பதை தெளிவாக காட்டுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியின் 10 அவது பட்டாலியன் நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்த விடுதலைப் புலிகள், அவர்கள் மீது 81 மி.மீ மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் கப்டன் - 1, லெப்ரின்கள் - 2, படையினர் - 3 என 6 படையினர் கொல்லப்பட்டும், 23 படையினர் காயமடைந்தும் உள்ளனர்.
இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலாகும். இதன் மூலம் படையினரை பதில் தாக்குதலுக்கு தூண்டியுள்ளனர். இதன் தொடர்ச்சி மணலாறு வரை விரிவாக்கப்படலாம். மணலாற்றில் உள்ள கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். 10 ஆவது பட்டாலியன் மீது நேற்றும் மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றது.
விடுதலைப் புலிகள் போரிடும் வலுவை இழந்து விட்டதாக கூறப்படுகின்றது. இது அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் ஏற்பட்ட கருத்தாகும். அவர்கள் தமது சொந்த பிரச்சாரங்களையே நம்ப தலைப்பட்டுள்ளனர்.
ஆனால் விடுதலைப் புலிகள் தமது கவனத்தை வட போர்முனையில் செறிவாக்குவது தெளிவாக புரிகின்றது. தமிழ் - சிங்கள புதுவருடம் வரப்போகும் எதிர்வரும் கிழமைகளில் இந்த உண்மைகள் வெளிவரலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
Sunday, March 18, 2007
வடக்கை குறி வைத்திருக்கும் விடுதலைப் புலிகள்: இக்பால் அத்தாஸ்.
Sunday, March 18, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.