Wednesday, March 21, 2007

கிழக்கே விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினருக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெறுகிறது.

புதன்கிழமை, 21 மார்ச் 2007 கிழக்கில் 5 படைமுகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் - 4 படையினர் பலி:14 பேர் காயம் மட்டக்களப்பில் சிறீலங்காப் படைகளின் முகாமான மாவடிவேம்பு படைமுகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதோடு செங்கலடி, சித்தாண்டி, கறுத்தப்பாலம், கும்புறுமுல்லை படைமுகாங்கள் மீது ஊடறுப்புத் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர். இப்படைமுகாம்கள் விடுதலைப் புலிகளின் செறிவான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளளாகியுள்ளது. இன்று அதிகாலை 12.30 மணிக்கு 300 பேர் கொண்ட விடுதலைப் புலிகளின் அணி ஒன்று ஊடுருவி ஊடறுப்புத் தாக்குதலை நடத்தியுள்ளன. மாவடிவேம்பு படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஊடறுப்புத் தாக்குதலில் படைத்தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துதுள்ளதாகவும் சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் உலங்குவானூர்த்தி மூலம் பொலநறுவை மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்ததவர்களில் 7 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் படைத்தரப்பினர் தாம் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. தளபதிகள் ரமேஸ், நாகேஸ்,சாந்தன் ஆகியோர் தலைமையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிறீலங்காப் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்றைய மோதலில் படையினருக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை படையினர் மூடிமறைத்துள்ளனர். இன்றைய மோதலில் பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொதுமக்களின் குடிமனைகள் தேமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.