[சனிக்கிழமை, 10 மார்ச் 2007] மணலாற்று சிறிலங்கா படைத் தளங்களில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணை வீச்சுக்களினால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு படையினர் நெடுங்கேணி மக்கள் குடியிருப்புக்களை நோக்கி கடும் எறிகணை வீச்சினை நடத்தினர். 1997 ஆம் ஆண்டு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட 'ஜெயசிக்குறு' படை நடவடிக்கையின் போது நெடுங்கேணிப் பிரதேசத்தில் இருந்து மக்கள் முற்றாக இடம்பெயர்ந்திருந்தனர். 1999 ஆம் ஆண்டு 'ஓயாத அலைகள் - 03' நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நெடுங்கேணிப் பிரதேசம் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது. இதன் பின்னர் நெடுங்கேணிப் பிரதேசத்தில் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தன. தற்போது சிறிலங்காப் படையினர் நடத்தி வரும் எறிகணை வீச்சுக்களினால் மீளக்குடியமர்ந்த மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதேவேளை மணலாற்றில் இருந்து சிறிலங்காப் படையினர் நாயாறு, அளம்பில் அதனை அண்டிய பகுதிகளை நோக்கி அடிக்கடி நடத்தி வரும் வரும் எறிகணை வீச்சுக்களினால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். 1984 ஆம் ஆண்டு மணலாற்றின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாண்டாங்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து சிறிலங்காப் படையினரால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவியதாக கூறப்படும் ஐந்து ஆண்டுகளில் சிறிலங்காப் படையினரால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, March 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.