[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007] அநுராதபுரம் வில்பத்து பிராந்திய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வில்பத்து வனச் சரணாலயத்துக்குரிய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜெயந்த சுரவீர மேலும் பல இராணுவத்தினருடனும் வன அலுலர்களும் தேடுதல் நடவடிக்கைக்காக சென்ற போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது. இதன்போது கேணல் சுரவீர உட்பட 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் வன அலுவலர்கள் 4 பேரும் கொல்லப்பட்டனர். சம்பவம் காட்டுக்குள் 30 கிலோ மீற்றர் ஆழமான பகுதியில் இடம்பெற்றது. கொல்லப்பட்ட படையினரில் மற்றொருவரும் அதிகாரி தரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் வில்பத்து வனச் சரணாலயத்தில் கடந்த சில நாட்களாக தேடுதல் நடவடிக்கையை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வில்பத்து பகுதியில் சிறிலங்காப் படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் வில்பத்து காட்டில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் காணாமல் போய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, March 09, 2007
அனுராபுதரம் - வில்பத்து பிராந்திய இராணுவத் தளபதி உட்பட 8 பேர் பலி-
Friday, March 09, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.