Friday, March 08, 2013

போர் அனுபவத்தை விட ராஜதந்திர அனுபவமே இலங்கைக்கு தேவை! இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்!

போரில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை காட்டிலும் இலங்கை ராஜதந்திர ரீதியில் செயற்பட்டு பல அனுபவங்களை பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.இந்திய லோக்சபாவில் இன்று உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.


இந்தியா இலங்கைக்கு அண்ணனாக செயற்படமுடியாது.எனினும் இலங்கையில் தமிழர்களின் துன்பங்களுக்கு தீர்வுக்காணப்படவேண்டும் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்கிறது.இதற்காக வெறுமனே அதிகாரப்பரவலாக்கம் அற்ற தீர்வு ஒன்றை இந்தியா விரும்பவில்லை.மாறாக அதிகாரப்பரவலாக்கம் முழுமையாகக்கொண்ட அளவில் இலங்கை தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டுமென தமதுரையினில் அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையினில் இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான யோசனையை ஆதரிப்பது தொடர்பில் இந்தியா இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்தியா எடுக்கும் தீர்மானம் விரைவில் லோக்சபாவில் அறிவிக்கப்படும் என்றும் குர்ஷித் குறிப்பிட்டார்.

அவர் தனது  கருத்துக்களை தெரிவித்தபோது, லோக்சபாவில் இருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தினரும் பாரதீய ஜனதாக்கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். இலங்கைக்கு எதிரான அமெரிக்க யோசனைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்று அவர்கள் கோசமிட்டனர்.இதனால் மிகவும் தர்மசங்கடமான நிலையினை அவர் எதிர்கொண்டிருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.