Tuesday, March 19, 2013

இராணுவ முகாமிற்கு வந்து சோதனயிடுமாறு அழைப்பு! வன்னி தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விடுக்கிறார்!!

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதை விடுத்து, அண்மையில் உள்ள இராணுவ முகாமிற்கு வந்து சோதனயிடுமாறு வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போன வடக்கு கிழக்கைச் சேர்ந்த எவரும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.


ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.எனினும் இதனை நிராகரித்துள்ள அவர் இராணுவத்தில் உயர் பதவியில் உள்ள தமக்கு, அவ்வாறு யாரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதை விடுத்து, அண்மையில் உள்ள இராணுவ முகாமிற்கு வந்து சோதனயிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.முன்னதாக அண்மையினில் வவுனியாவினில் அவர் நடத்திய உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கான பத்திரிகையாளர் மாநாட்டினிலும் அவர் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.வன்னி இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்தவர்களள் இவரும் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.