Sunday, March 10, 2013

ஈழத் தமிழருக்காக 3வது நாளாக உண்ணாவிரதம்! - மாணவர்களின் படங்கள் இணைப்பு



 08.03.2013 வெள்ளிக்கிழமை காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும், இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது 
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும், உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

இதில் 8 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள செங்கொடி திடலில் தங்களது போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர், பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் பெரும் திரளாக வந்து மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான ஆகியோர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

உண்ணா நிலையில் இருக்கும் மாணவர்கள் விவரம்

1. திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
2. ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு
3. அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
4. பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு
5. பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
6. மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு
7. சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு
8. லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு


படங்கள்: ஸ்டாலின், அசோக்

1 comment:

  1. நன்றாகப் படிக்கின்ற மாணவர்கள் ,நம்மினம் உயர்ந்த நீதியும் அமைதியும் பெறவே , அறவழியில் போராடுகின்றனர். இன்னும் நிறைய மாணவர்கள் இவர்களுக்குத் துணையாக உண்ணாவிரதப் போராட்ட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் . எண்ணிக்கை கூட வேண்டும். வெறும் ஆதரவு என்பது , வேடிக்கையாய் முடிந்துவிடும். அன்று " தியாகதீபம் திலிபன் " உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட [ மூச்சு - ஆன்மா ] இன்று இம்மாணவர்கள் மூலமாக மூட்டப்படுகிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் தொடர் உண்ணாநோன்பில் பங்குபெற்று " மாண்புமிகு நல்ல மாணவர்களால் நீதி கிடைத்தது என்று வரலாறு பேச வேண்டும். நன்றி. வாழ்த்துகள். வாய்மையே ! வெல்லும் !!

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.