Wednesday, August 29, 2012

கிழக்கில் ஆட்சி அமைக்க நாங்கள் முஸ்லிம் காங்கிரசை கெஞ்சமாட்டோம் - மக்கள் எம்மை ஆதரிப்பார்கள்: பசில் ராஜபக்‌ஷ

 
கிழக்கில் ஆட்சி அமைக்கும் போது நாங்கள் முஸ்லிம் காங்கிரசை கெஞ்சமாட்டோம். அவர்களை கூட்டாட்சி அமைக்க அழைக்கவும் மாட்டோம் என பசில் ராஜபக்‌ஷ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்று தமிழ்ட்தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு பெரும் கட்சிகள் வெற்றிபெற்றால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை கிழக்கில் இருந்து அகற்றப்பட வாய்ப்புகள் உள்ளது என அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
 
முஸ்லிம் காங்கிரஸ் இனியும் மஹிந்த அரசுடன் சேரும் வாய்ப்பு இல்லை என்றே கூறபடுகின்றது, அதற்கு ஏற்றால் போலவே நேற்று பசில் ராஜபக்‌ஷவும் பேசியுள்ளார். அதாவது அவரது பேச்சில் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய உறவு தற்போது இல்லை என்றே கூறவேண்டும். அதற்காக நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. காரணம் இது தேர்தல் காலம்.
அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆளும் கட்சி நாடாது என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதற்கு மக்களின் ஆணை கிடைக்காது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறு மக்களின் ஆதரவுடன் எம்மால் ஆட்சியமைக்க முடியும்.
மக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுவோம். கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எந்தவொரு கட்சியினதும் ஆதரவை நாடாது.

ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கவில்லையாயின் ஆணையை பெறுபவர்கள் கிழக்கில் ஆட்சியமத்துக்கொள்ள முடியும். எம்மை பொறுத்த வரை கிழக்கு மாகாணத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துவருகின்றோம். அரசியல் தீர்வைக்காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துவருகின்றோம்.
இந்நிலையில் மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆளும் கட்சிக்கு உள்ளது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸுக்கும் அரசங்கத்துக்கும் இருக்கவேண்டிய உறவு தற்போது இல்லை என்றே கூறவேண்டும்.

தனித்துப் போட்டியிடும் முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் 10 வேட்பாளர்களை கேட்டது. நாங்கள் ஒன்பது வேட்பாளர்களை தருவதாக கூறினோம். அதனை விரும்பாது தனித்துச் சென்றனர். ஆனால் தற்போது அவர்களால் ஒன்பது ஆசனங்களைக் கூட பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எம்முடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அந்த ஒன்பது ஆசனங்களை பெற்றிருக்கலாம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.