Saturday, May 05, 2012

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் 36-வது அகவை இன்றாகும் !

தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது . தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 36-வது அகவையில் கால் பதிக்கிறது.

1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், புதிய தமிழ்ப்புலிகள் என்ற இயக்கத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய கட்டமைப்பாக மாற்றினார்.

தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் உருவாக்கியவர் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். மூன்றாவது ஈழப் போரின்போது உலகின் பார்வையை தம்மகத்தே திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள், உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கியவர்கள். 2ம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு நாட்டு இராணுவம் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது, இலங்கையில் தான். முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டபோது ஓர் இரு நாட்களில் சுமார் 1,200 இலங்கப் படையினர் கொல்லப்பட்டனர். இதனை அமெரிக்கா உட்பட இஸ்ரேல் மற்றும் இந்தியா போன்ற வல்லரசுகளும் அதிர்சியுடன் உற்றுநோக்கியது.

அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள். உலகில் நடைபெற்ற பல மூர்க்கத்தனமான தாக்குதல்களை மக்கள் அறிந்திருப்பர். ஆனால் எந்த ஒரு நாட்டுடனும் தரைவழித் தொடர்பு இல்லாத, இலங்கைத்தீவில், கப்பல் மூலம் ஆயுதங்கலைத் தருவித்து அதனைக் கொண்டு இலங்கை அரசோடு போர் புரிந்து, தமக்கென்று ஒரு இடத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள். இவர்கள் அதீத வளர்ச்சி இந்துமாகடல் பிராந்தியத்தில் மட்டுமல்ல, அகில உலகிற்குமே ஆபத்து என தவறாகக் கருதிய சில வல்லரசுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்க திட்டம் தீட்டியது, அதற்கான உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியதும் யாவரும் அறிந்த விடையம்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்காலிகமாக மெளனிக்கப்பட்டுள்ளது. இதனை அவ்வியக்கத்தின் தலைமைப் பீடம் 2009ம் மே மாதம் மக்களுக்கு அறிவித்தது. தாம் தமது ஆயுதங்களை தற்காலிகமாக மெளனிப்பதாக மட்டுமே அவர்கள் அறிவித்தார்களே தவிர நிரந்தரமாக மெளனிப்பதாக அவர்கள் அறிவிக்க வில்லை ! இதன் பொருள் என்ன என தமிழ் மக்கள் நன்கறிவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை !

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.