சுமத்திரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டதையடுத்து தொடர்ச்சியான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த தென்பகுதி சிங்களவர்கள் அலறியடித்துக் கொண்டு
ஓட்டம் பிடித்துள்ளனர். நாளை மறுதினம் தமிழ் சிங்கள புத்தாண்டு வருவதை முன்னிட்டு சிங்களவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சமயத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாதுகாப்புத் தேடி அலறியடித்து ஓட்டம்பிடித்துள்ளனர்.
சிங்களவர்கள் சித்திரை புத்தாண்டை மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் நாளை வியாழன் என்பதால் இன்று புதன்கிழமை அடுப்பு மூட்டி சட்டிவைத்து புதுவருடத்திற்கான பலகாரங்கள் செய்யத்துவங்கியிருந்தனர் பெரும்பாலான சிங்களமக்கள்.
சோதிட சாத்திரங்களில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ள சிங்கள மக்கள் நல்ல நாள்பார்த்து இன்று பலகாரங்களை செய்யத் தொடங்கியிருந்தனர். இவ்வாறே காலி மாத்தறை அம்பாந்தோட்ட உள்ளிட்ட கரையோரப் பகுதி சிங்களவர்களும் புதுவருடத்திற்கான பலகாரங்களை செய்யத்துவங்கியிருந்த நிலையில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையினை அடுத்தே அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்துள்ளனர்.
ஈழதேசம் இணையம்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.