Thursday, March 22, 2012

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் வெற்றி! பழிக்குப் பழியாக தமிழர்கள் மீது வன்முறையினை கட்டவிழ்த்துவிட சிங்களம் முயற்சி!! அச்சத்தில் தமிழர்கள்!!!

ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 24 நாடுகளது ஆதரவுடன் வெற்றிபெற்றதை உலகத்தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகையில் தாயகத்தில் உள்ள தமிழர்கள் அச்சத்துடன் அடுத்துவரும் நொடிப்பொழுதை எதிர்நோக்கியிருப்பதாக ஈழதேசத்தின் செய்தியாளர்கள் மூலம் அறியமுடிகின்றது.

தமிழர்கள் வீடுகளிற்குள் முடங்கிக் கிடப்பதாகவும் அத்தியாவசிய தேவைகளிற்காகவேனும் வெளியில் வருவதை தவிர்த்துவருவதாக தகவல்கள் வந்தவண்ணமுள்ளது.

சிறிலங்காவில் அங்கொன்று இங்கொன்றாக தமிழர்கள் மீது தாக்குதல் சம்பங்கள் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் மக்கள் மத்தியில் பரவிவருவதை அடுத்து தமிழர்கள் மிகுந்த பதற்றத்துடன் உள்ளனர்.

சிறிலங்கா அரசதரப்பு ஜெனீவாத் தீர்மானமானது முழு சிறிலங்கா தேசத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சதியாக பிரச்சாரம் செய்து தீவிர சிங்களவர்கள் மத்தியில் இனத்துவேசத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தீர்மானமும் வெற்றி பெற்றிருப்பதால் அவர்கள் தமிழர்களிற்கு எதிரான வன்முறையில் ஈடுபடக் கூடும் என தமிழர்களாலும் தமிழின மனிதஉரிமை ஆர்வலர்களாலும் அச்சத்துடன் நோக்கப்படுகின்றது.

ஏற்கனவே சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிங்கள அரசால் தமிழர்கள் மீது கலவரம் ஊற்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் வந்துள்ள நிலையிலும் வடகிழக்குப் பகுதிகளில் சிங்கள இராணுவத்தின் நடமாட்டங்கள் அதிகரிக்கப்பட்டு அச்சுறுத்தலான நிலமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்திருந்த நிலையில் தீர்மானம் வெற்றி பெற்றதன் பின்னணியில் தமிழர் பகுதிகளில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது குறித்து தமிழர்களை கலங்க வைத்துள்ளது.

இதேவேளை இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வெற்றிபெற்றுள்ளமையை அடுத்து ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் இனிப்பு பண்டங்கள் வழங்கி தமது உணர்வுகளை தமது நண்பர்கள் மத்தியில் வெளிப்படுத்துவதாகவும் ஈழதேசம் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.