Monday, March 19, 2012

டில்லியுடன் பேச்சு நடாத்த இலங்கை இராஜதந்திரிகள் விரைவு!

ஜெனிவா மாநாட்டில் புதுடில்லியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடன் இலங்கை அவசர இரகசிய மந்திராலோசனை நடத்தி வருகின்றது என நம்பகரமாகத் தெரியவருகின்றது. இலங்கை அரசுடன் தொடர்புடைய முக்கிய இராஜதந்திரி ஒருவரே டில்லி அரசின் முக்கியஸ்தர்களுடன் இது விடயம் தொடர்பில் பேச்சு நடத்தி வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.

.
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தாம் எதிர்ப்போம் என இந்தியா முன்னதாக இலங்கையிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருந்தது. எனினும், இலங்கைக்கு எதிரான பிரே ரணையை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டிலிருந்து தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து தனது நிலைப்பாட்டில் இந்தியா தளர்வுப் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது.
.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் நாள் நெருங்கி வருவதால் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி இராஜ தந்திரி பேச்சு களை முன்னெடுத்துள்ளார் என்று தெரியவரு கின்றது.
.
இந்திய மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் இருவரைச் சந்தித்துப் பேசியுள்ள மேற்படி இராஜதந்திரி, பிராந்தியத்தின் ஸ்திரமான நிலையைத் தளர்வடையச் செய்யும் எந்தச் செயற்பாடுகளுக்கும் இந்தியா துணைபோகக்கூடாதென்றும் இதன் பிரகாரம் ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படவேண்டிய தேவை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்று அறியவருகிறது.
.
அதேசமயம், இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.