Monday, March 19, 2012

30 செக்கனில் உண்ணாவிரதம் ரத்து : கருணாநிதி அதிரடி அறிவிப்பு !

இம்மாதம் 22ம் திகதி தாம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்த கருணாநிதி அதனை முப்பது(30) செக்கனில் வாபஸ் வாங்கினார். மன்மோகன் சிங் அறிக்கையைத் தொடர்ந்தே தான் அதனை வாபஸ் பெற்றதாக அவர் அறிவித்துள்ளார். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், கருணாநிதி தான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று அறிவித்தல் விட்டு 30 செகண்டுகளில் மன்மோகன் சிங்கின் அறிக்கையும் வெளியாகிவிட்டதுதான். மன்மோகன் சிங் இவ்வாறு அறிவித்தல் விடுவார் என்று தெரிந்துதான் கருணாநிதி இவ்வாறு அறிவித்தாரா ? இல்லை அறிவித்தல் வருமுன் இவ்வாறு ஒரு அறிவித்தலை விட்டு பின் வாபஸ் வாங்கினாரா தெரியவில்லை !

இது எல்லாம் அவருக்கே வெளிச்சம். இந்த வயதிலும் புத்தி தடுமாறாமல் படு நிதானமாக இருக்கும் பெருந்தலைவர் இவர்தான் ! இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முடிவை தாம் வரவேற்பதாக கருணாநிதி தெரிவித்து, எல்லாவற்றையும் முடித்து வைத்தார் ! ஆனால் மன்மோகன் சிங் வெளிப்படையாக தான் அமெரிக்காவை ஆதரிப்பதாகத் தெரிவிக்கவில்லை. மாற்றங்கள் செய்தால் ஆதரிப்போம் என்கிறார். ஆனால் தி.மு.காவினரோ, கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார் என்று அறிவித்ததால் தான் மன்மோகன் சிங் இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுத்தார் என்ற ரேஞ்சுக்கு கதைக்கிறார்கள்.

இதனை சில தமிழ மக்களும் நம்புகிறார்கள். இதுதான் அரசியலோ தெரியவில்லை !

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.