Friday, March 16, 2012

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அமுல்படுத்தப்படும் கொள்கைகள் குறித்து ஐ.சீ.ஜீ. அதிருப்தி

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அமுல்படுத்தப்படும் கொள்கைகள் குறித்து சர்வதேச அனர்த்தக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் சில கொள்கைகள் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வந்ததாகவும், குறித்த பிரதேசத்தின் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் சனத்தொகைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

வடக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச அனர்த்தக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகள், அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமேன வலியுறுத்த வேண்டுமென கோரியுள்ளது.

எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.